QR குறியீடு அல்லது குயிக் ரெஸ்பான்ஸ் குறியீடு என்பது ஒரு வகை பார்கோடு ஆகும், இது புள்ளிகள் அல்லது பிக்சல்கள் வடிவில் தரவுகளை சேமிக்கும் பொதுவாக ஒரு சதுர வடிவ கிரிட் ஆகும். QR குறியீடுகளை ஸ்கேன் செய்து படிக்க வடிவமைக்கப்பட்ட மொபைல் கேமரா அல்லது செயலியைப் பயன்படுத்தி கிரிட் வடிவில் உள்ள இந்தக் குறியீடு படிக்கக்கூடியது ஆகும். QR குறியீடுகள் பல தரவைச் சேமிக்கும் திறன் கொண்டவை, இது பயனரை உடனடியாக தகவல்களை அணுக அனுமதிக்கிறது, அதனால்தான் இது குயிக் ரெஸ்பான்ஸ் குறியீடு என்று அழைக்கப்படுகிறது.

கட்டணம் செலுத்துவதற்கு QR குறியீடுகளைப் பயன்படுத்தும்போது QR குறியீடுகளின் பயன்பாடுகள், அச்சுறுத்தல்கள் மற்றும் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பான இணைய நடைமுறைகளைப் பற்றி டிஜிட்டல் பயனர்கள் அறிந்திருப்பது அவசியம்.