ஃபிஷிங் (ஏமாற்றுதல்) என்பது ஒரு விதமான சமூகப் பொறியியல் தாக்குதல் ஆகும். ஃபிஷிங் தாக்குதலில் மோசடி செய்பவர்கள் நம்பகமான நிறுவனத்திடமிருந்து (.கா. வங்கி, புகழ்பெற்ற நிறுவனம், அமைப்பு போன்றவற்றிலிருந்து) வந்ததைப் போன்ற மின்னஞ்சல்களை உருவாக்குகிறார்கள், அதில் உண்மையான இணையத்தளத்தைப் பிரதிபலிக்கும் அல்லது தீங்கிழைக்கும் இணைப்புகளைக் கொண்ட போலி வலைத்தளத்திற்கான இணைப்பு இருக்கும். இந்த ஃபிஷிங் மின்னஞ்சல்களில் பெரும்பாலானவை, முக்கியமான தகவல்களை வெளியிடுவதற்கும், மோசடி செய்பவர் விரும்புவதைச் செய்வதற்கும் இலக்கு நபரை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டவை.

ஃபிஷிங் வலைத்தளங்களின் எடுத்துக்காட்டு

• gmai1.com

• icici6ank.com

• bank0findia.com

• yah00.com

• eci.nic.ni

• electoralsearching.in