கடவுச்சொல் என்பது பொதுவாக பயனர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்தவும், கணினி அல்லது சேவைக்கான அணுகலைப் பெறவும் வழங்க வேண்டிய எழுத்துக்கள் அடங்கிய சரம் ஆகும். இணைய (சைபர்) உலகில் உள்ள மற்றவர்களிடமிருந்து உங்கள் உடைமைகள் அல்லது தகவல்களைப் பாதுகாப்பதற்கான ஒரு பொறிமுறையாக இது செயல்படுகிறது. கடவுச்சொற்கள் என்பது பொதுவான ஒரு அங்கீகரிப்பு முறையாக செயல்படுகிறது, இது பயனரின் அடையாளத்தை சரிபார்க்க பயன்படுகிறது.

கணக்குகள், கோப்புகள் மற்றும் பிற முக்கியமான தகவல்களைப் பாதுகாக்க கடவுச்சொற்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. வலுவான மற்றும் தனித்துவமான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதும் பல கணக்குகளில் ஒரே கடவுச்சொல்லை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதும் முக்கியம்.

பயன்கள்:

அங்கீகரிப்பு - கடவுச்சொல் ஆனது நம்பகத்தன்மையுடன் சாதனத்தின் உரிமையாளர்/பயனர் அடையாளத்தை அங்கீகரிக்கிறது அல்லது சரிபார்க்கிறது.

அணுகல் ஒரு சாதனத்தின் உண்மையான பயனர் அச்சாதனத்தை அணுகுவதை கடவுச்சொல் உறுதி செய்கிறது.

பாதுகாப்பு பயனரின் அணுகலைக் கட்டுப்படுத்தி தரவு, நெட்வொர்க் மற்றும் தகவலுக்கான பாதுகாப்பை கடவுச்சொல் உறுதி செய்கிறது