இன்றைய உலகில் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்வதற்கு பல வழிகள் இருக்கின்றன, அவற்றுள் ஒரு வழிதான் மின்னஞ்சல். ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மின்னஞ்சல் கணக்காவது நிச்சயம் வைத்திருப்பர். பல்வேறு வகையான மின்னஞ்சல் சேவை வழங்குநர்கள் இருக்கின்றனர், அவர்களில் சிலர் இச்சேவையை இலவசமாக வழங்குகின்றனர், சிலர் கட்டணம் பெற்று இச்சேவையை வழங்குகின்றனர். தேவை மற்றும் அவசியத்தின் அடிப்படையில், ஒருவர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஒரு கணக்கு, வேலை தொடர்பான பயன்பாட்டிற்காக ஒரு கணக்கு, இதர நோக்கத்திற்காக ஒரு கணக்கு என பல மின்னஞ்சல் கணக்குகளை வைத்திருக்கலாம்.

பல விதமான பணிகளுக்காக பல மின்னஞ்சல் கணக்குகளைப் பயன்படுத்துவது ஒரு நல்ல நடைமுறை என்பதில் சந்தேகம் எதுவுமில்லை, ஆனால் ஒருவர் தங்கள் கணக்குகளுடன் தொடர்புடையதாக இருக்கும் பாதுகாப்புச் சிக்கல்களைப் பற்றியும் கவனமாக இருக்க வேண்டும்.

மின்னஞ்சல் பாதுகாப்பு என்பது மின்னஞ்சல்கள் மற்றும் மின்னஞ்சல் அமைப்புகளின் இரகசியத்தன்மை, ஒருமைப்பாடு மற்றும் கிடைக்கும் தன்மையைப் பாதுகாக்கும் செயல்முறையாகும்.