சமீப காலமாக, பல்வேறு இணைய மோசடிகள் தொடர்பான சைபர் குற்றங்கள் திடீரென அதிகரித்த வண்ணம் உள்ளன, அவற்றில் ஒன்று போலியான வேலை வாய்ப்புகள்.

வேலை தேடுபவர்களில் பெரும்பாலோர் இத்தகைய மோசடிகாரர்களுக்கு மிக எளிதாக இரையாகி, அந்தப் போலி வேலைகளில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டுமென்ற முயற்சியில் தங்கள் பணத்தை இழந்து தவிக்கின்றனர்.

போலி வேலையில்

போலியான வேலையை நம்பி ஏமாந்து பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் பின்வருமாறு:

  1. புதிய வேலைகளைத் தேடும் பட்டதாரி மாணவர்கள்.
  2. திறனை வளர்த்துக் கொள்ளும்/சிறந்த பேக்கேஜ்களுக்காக தங்கள் வேலையை மாற்றிக் கொள்ள விரும்பும் வல்லுநர்கள்.
  3. வெளி நாடுகளில் (தகவல் தொழில்நுட்பத் துறை) வேலை செய்ய வேண்டுமென்று ஆசைப்படுபவர்கள்.
  4. மத்திய கிழக்குப் பகுதிகளில் மின்சார வல்லுநர், செவிலியர், குழாய் பணியாளர், கொத்தனார் போன்ற சில அமைப்புசாரா துறையில் வேலைத் தேடுபவர்கள்.